நுழைவாயில்களில் இறக்குமதி வரி இல்லா கடைகள் பற்றி சீன நிதி அமைச்சகம் உள்ளிட்ட 5 வாரியங்கள் ஜனவரி 21ஆம் நாள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டன.
அதன்படி, வூஹான் தியன்ஹே சர்வதேச விமான நிலையம் உள்பட 41 நுழைவாயில்களில் தலா ஒரு புதிய இறக்குமதி வரி இல்லா கடை நிறுவப்படும். மேலும் சில நுழைவாயில்களில் இருக்கும் இறக்குமதி வரி இல்லா கடைகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவாயில்களில் இறக்குமதி வரி இல்லா கடைகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல், சீனாவுக்கு வருகை தரும் பயணிகளின் வரி இல்லா நுகர்வை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நுகர்வை ஊக்குவிப்பதில் வரி இல்லா கடைகளின் பங்களிப்பு மூலம் வரி இல்லா பொருட்களின் சில்லறை விற்பனையின் சீரான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியையும் இது முன்னேற்றும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
