சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்படி கல்வி துறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்வேறு இலக்குகளும் கடமைகளும் பன்முகங்களிலும் உயர் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், சீனாவின் அடிப்படை கல்வி உலகில் உயர் வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி நிலையை எட்டியுள்ளது என்றும் சீனக் கல்வி துறை அமைச்சர் ஹுவெய் ஜின் பங் 23ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சீனாவில் முன்பருவக் கல்வியில் குழந்தைகள் சேரும் தோராய விகிதம், 2012ஆம் ஆண்டில் இருந்த 64.5விழுக்காட்டிலிருந்து தற்போது 92விழுக்காடாக அதிகரித்தது. கட்டாயக் கல்வி நாடு முழுவதும் உள்ள 2895 மாவட்டங்களிலும் சம நிலையில் வளர்கின்றது என்று தெரிவித்தார். உயர் கல்வியில் மாணவர்கள் சேரும் தோராய சேர்க்கை விகிதம் 2012ஆம் ஆண்டில் இருந்த 30விழுக்காட்டிலிருந்து தற்போது 60.8விழுக்காடாக அதிகரித்தது. 14ஆவது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உயர் கல்வி துறையிலிருந்து சமூகத்துக்கு அனுப்பப்பட்ட திறமையான மக்களின் எண்ணிக்கை 5கோடியே 50ஆயிரத்தை எட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.