2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுப்பு தெரிவித்தது.
ஆனால், இந்தியாவில் வீரர்களுக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் பிடிவாதத்தை ஏற்காத ஐசிசி, அவர்களுக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது.
ஒருவேளை இந்தியாவுக்கு வந்து விளையாட வங்கதேசம் மறுத்தால், அந்த அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளது.
இதனால் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் பங்கேற்குமா என்பதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
