கிரீன்லாந்து தீவை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவேன் என்றும், ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பேன் என்றும் மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு படி பின்வாங்கியுள்ளார்.
டாவோஸில் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்த பிறகு, கிரீன்லாந்து தொடர்பாக ஒரு ஒப்பந்தக் கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “கிரீன்லாந்து மற்றும் ஒட்டுமொத்த ஆர்க்டிக் பகுதி தொடர்பாக வருங்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த வர்த்தக வரிகள் ரத்து செய்யப்படுகின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் சமரசம்; ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு ரத்து
