இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. ஜூலை 23ஆம் தேதி துவங்கும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
முன்னதாக இத்தொடரில் புதிய கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் முதல் 2 போட்டிகளில் அற்புதமாக விளையாடினார். முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் 2வது போட்டியில் 430 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் 3வது போட்டியில் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லியுடன் மோதியது அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
ரன் மெஷின் கில்:
ஏனெனில் நல்ல ஃபார்மில் இருந்து 3வது போட்டியில் சுப்மன் கில் அரை சதம் கூட அடிக்காதது இந்தியாவை தோல்வியையே கொடுத்தது. இந்நிலையில் ஜாக் கிராவ்லியுடன் நேர்ந்த மோதலை சுப்மன் கில் மறந்து விட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தி மான்செஸ்டரில் ரன் மெஷினாக செயல்படுவார் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சுப்மன் கில் தன்னுடைய ஃபார்மை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான திறனைக் கொண்டுள்ளதாக நம்புகிறேன். இந்த இடைவெளியில் அவர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தந்தையுடன் சமீபத்திய மோதல் பற்றி உரையாடி சுய பரிசோதனை செய்திருப்பார். இனிமேல் அவர் தனது கேப்டன்ஷிப், ஃபீல்டிங், பேட்டிங் தந்திரோபாயங்கள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்”
மஞ்ரேக்கர் நம்பிக்கை:
“அதைச் செய்தாலே இயக்கத்தில் இருந்த அந்த ரன் மெஷின் மீண்டும் நன்றாக எண்ணெய் ஊற்றப்பட்டு மான்செஸ்டரில் இயங்கத் தொடங்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் வெற்றிக்கு அவருடைய பொறுப்பு முக்கியம். அதே சமயம் கடந்தப் போட்டியில் பேட்டிங்கில் கில் பெரியளவில் பங்காற்றவில்லை. அதையும் தாண்டி இந்திய பேட்டிங் துறை இங்கிலாந்துக்கு பெரிய சவாலைக் கொடுத்தது”
இதையும் படிங்க: சுதர்சனை தூக்கி எறியாதீங்க.. அவருக்கு பதில் மர்மமான குல்தீப்பை சேர்த்தா இங்கிலாந்தை மடக்கிடுவாரு.. ஹர்பஜன்
“அது நாம் முழுமையாக கில்லை மட்டும் நம்பியிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அது இந்திய அணிக்கு 4வது போட்டியில் மிகவும் நல்ல விஷயம்” என்று கூறினார். முன்னதாக மான்செஸ்டரில் இருக்கும் ஓல்ட் ட்ராபேர்ட் மைதானத்தில் இந்தியா வரலாற்றில் ஒருமுறை கூட வென்றதில்லை. அதை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
The post சுப்மன் கில் அதுல கவனம் செலுத்தி மான்செஸ்டரில் மெஷினா ஓடுவாரு.. இந்தியா யாரையும் நம்பியில்ல.. சஞ்சய் மஞ்ரேக்கர் appeared first on Cric Tamil.