சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 22ஆம் நாள் முற்பகல் 10 மணிக்குச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இதில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில், சீனாவின் தானிய உற்பத்தி அளவானது 71 கோடியே 49 இலட்சம் டன்னாகும்.
இது 2024ஆம் ஆண்டை விட 84 இலட்சம் டன் அதிகரித்து, வரலாற்றில் மிக அதிகமான நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் தானிய உற்பத்தி தொடர்ந்து 2 ஆண்டுகளாக 70 கோடி டன்னைத் தாண்யுள்ளது என்று தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டில், புதிதாகக் அமைக்கப்பட்டு அல்லது சீரமைக்கப்பட்டுள்ள உயர் வரையறை வாய்ந்த விளை நிலங்களின் பரப்பளப்பு 50 இலட்சத்து 47 ஆயிரம் ஹெக்டர் அதிகரித்து, 6.67 கோடி ஹெக்டராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், கடந்த ஆண்டில் காணப்பட்ட வேளாண் தொழில் நுட்பத்தின் முன்னேற்றப் பங்கு விகிதம் 64 விழுக்காட்டிற்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
