அம்மா அப்பா!மதிப்புரை

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

அம்மா அப்பா” புதுக்கவிதைகள்
நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி.
நூல் மதிப்புரை பட்டிமன்றப் பேச்சாளர், பண்பலை வானொலி அறிவிப்பாளர் திருமதிநெல்லை கார்த்திகா ராஜா.

“உள்ளத்து உள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை” என்கிறார் தேசிய விநாயகம் பிள்ளை . 📚🖊️
எதையும் எல்லோரும் பார்த்துவிட்டு போகிறபோது அதை பதிவு செய்துவிட்டு போகிறவர் தான் கவிஞன்.❣️
கவிஞனின் பேனா முனை தலைகுனியும் போது ஒரு சமூகம் தலை நிமிர்கிறது என்கிறான் ஒரு கவிஞன் 📚🖊️🦋
அம்மா அப்பா என்னும் இந்த கவிதை தொகுப்பில் அம்மாவைப் பற்றி அப்பாவைப் பற்றி அப்துல் கலாமைப் பற்றி திருநங்கைகளைப் பற்றி பெண்களைப் பற்றி சாதனைப் பெண்களைப் பற்றி சிறப்பான கவிதைகளை கவிஞர் கொடுத்துள்ளார்…📚🖊️
இவரது கவிதைகள் பல்வேறு கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருப்பது இவர் பெற்ற சிறப்பு …🖊️📚
அம்மா என்றாலே அன்பு
அம்மா என்றாலே கருணை
அம்மா என்றாலே பாசம் ❤️
உயிரும் மெய்யும் உயிர் மெய்யும் இணைந்த உயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா 😍
தன்னலம் கருதாது அது சேய் நலம் கருதும் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய் 🦋
தன்னைப் பற்றி யோசிக்காமல் தன் குழந்தையை பற்றி யோசிப்பவள் தானே தாய் …
தினம் தினம் கொண்டாடப்பட வேண்டியவள் அம்மா அவளுக்கு எதற்கு அன்னையர் தினம் 📚🖊️
திருநங்கைகள் கடவுளின் அவதாரங்கள் 🙏🙏
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்த உயிர்மெய் எழுத்துக்கள் திருநங்கைகள் ..
மதிப்பிற்குரிய பெண்மை என்னும் தலைப்பில் பெண்மையைப் பற்றிய சிறப்பைக் கவிஞர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்
“ஆண்களால் விடுதலை பெண்களுக்கு கிடைக்காது எலிகளுக்கு விடுதலை புலிகளால் கிடைக்காது….”
நகைச்சுவை ததும்பிய வரிகள். ..🦋😍
“நேயம் ஒன்றே
நெஞ்சுயர்த்த வைக்கும் முயன்றால் முடியும் வானமகள் நாணுகிறாள்”
போன்ற கவிதைகள் படிப்பவருக்கு ஊக்கம் தருபவை 📚🖊️
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே: சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே” என்கிறது புறநானூறு.
மேன்மைமிகு அப்பா, அப்பாவின் நாற்காலி, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் கவிதைகளை அடுக்கி இருக்கிறார் கவிஞர்.
மொத்தத்தில் அம்மா அப்பா நம் இரத்த பந்தம்
கவிஞரின் கவிதைகள் இலக்கியத்திற்கு சொந்தம்…📚🖊️🙏
மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா..🙏 தொடரட்டும் தங்கள் கவிதை தொண்டு …..🙏🙏🙏

Please follow and like us:

You May Also Like

More From Author