அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக போர் மற்றும் கூடுதல் வரி அச்சுறுத்தல்களை விடுத்திருப்பதும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் இறக்குமதி வரி 25% வரை உயர்த்தப்படும் என்றும், தேவைப்பட்டால் ஆயுத ரீதியான தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த போர் அச்சம் மற்றும் வர்த்தகப் போர் சூழல் காரணமாக, அமெரிக்க பங்குச்சந்தையான டௌ ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் கடுமையாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் $1.4 டிரில்லியன் (சுமார் ₹116 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலால் நேட்டோ அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, ஐரோப்பிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையக்கூடும் என்ற பயத்தில், நடுத்தர மக்கள் உட்பட பல முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையிலான இந்த கடுமையான மோதுதல் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதே இந்த மிகப்பெரிய சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
