ஒரு இருண்ட சுரங்கப்பாதை… சொர்க்கம் குறித்த பேசிய 80 வயது மூதாட்டி…!!! 

Estimated read time 0 min read

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி நார்மா எட்வர்ட்ஸ், தான் மூன்று முறை மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பியதாகவும், அப்போது சொர்க்கத்தைக் கண்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

தனது 20 வயதில் அறுவை சிகிச்சையின் போது முதல்முறையாக இவரது இதயம் துடித்தது நின்றபோது, ஒரு இருண்ட சுரங்கப்பாதையில் ஓடுவது போன்ற உணர்வை இவர் பெற்றுள்ளார்.

அதன் முடிவில் ஒரு தெய்வீக ஒளியைக் கண்டதாகவும், அங்கு தனது வாழ்க்கை ஒரு திரைப்படம் போல ஓடியதைக் கண்டதாகவும் அவர் விவரித்துள்ளார். அங்கு தனது மறைந்த அத்தையைச் சந்தித்தபோது, “உனது நேரம் இன்னும் வரவில்லை” என்று அவர் தன்னைத் திருப்பி அனுப்பியதாக நார்மா கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட இரண்டு மாரடைப்புகளின் போதும் தான் மருத்துவ ரீதியாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அந்த சமயத்தில் ஒரு பெண் தேவதையைச் சந்தித்ததாகவும், அவர் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விளக்கி மீண்டும் பூமிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறார்.

இந்த மரண அனுபவங்களுக்குப் பிறகு, மற்றவர்களின் உடலில் உள்ள நோய்களைக் கண்டறியும் ஆற்றலும், அதிகப்படியான மின் ஆற்றலும் தனது உடலில் உருவானதாக அவர் நம்புகிறார். அறிவியலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய கூற்றுகள் தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author