பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட தனது ஃபேசினோ மற்றும் ரேஇசட்ஆர் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்களின் முன் பக்க பிரேக் கேலிப்பரில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால், பிரேக் பிடிக்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான மாடல்களில் உற்பத்தி காலம் மே 2, 2024 முதல் செப்டம்பர் 3, 2025 வரை தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்கள்.
மொத்த எண்ணிக்கை சுமார் 3,06,635 யூனிட்கள் ஆகும். ரேசட்ஆர் 125 எஃப்ஐ ஹைப்ரிட் மற்றும் ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைப்ரிட் ஆகிய மாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 3 லட்சம் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுகிறது யமஹா; எதற்காக?
