தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ. 28) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை நள்ளிரவில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.
புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு, ஏமன் நாட்டின் பரிந்துரையான ‘தித்வா’ (Ditwah) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. (அரபு மொழியில் தித்வா என்றால் ‘தீவு’ என்று பொருள்).
சென்னையை நெருங்கும் ‘தித்வா’ புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
