இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிப்பு  

Estimated read time 1 min read

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜனவரி 27, 2026) நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வங்கிச் சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ‘ஐந்து நாள் வேலை வார’ (5-day work week) முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் முதன்மைக் கோரிக்கை.
தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

You May Also Like

More From Author