விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதித்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக 1 டிரில்லியன் டாலர் (சுமார் 84 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த மாபெரும் வணிக மைல்கல் உலகளாவிய நிதிச் சந்தைகளில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனங்களின் தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு முன்பாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 971 பில்லியன் டாலராக இருந்தது.
தற்போது பங்குச்சந்தை வர்த்தகத் தொடக்கத்திற்குப் பிறகு அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் சாதனை: இந்தியாவின் ஜிடிபியில் 25%
