இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தின் பின்னணி இசையுடன், ரஃபேல், சுகோய், ஜாகுவார் மற்றும் தேஜஸ் ஆகிய போர் விமானங்கள் அணிவகுக்கும் இந்த வீடியோவில், “அமைதியின் உடைக்க முடியாத உத்தரவாதம் நான்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ ஆபரேஷன் சிந்தூர் குறித்த பழைய நினைவுகளையும், சந்தேகங்களையும் மீண்டும் தூண்டியுள்ளது.
பாகிஸ்தானின் அணுசக்தி தளத்தை இந்தியா தாக்கியதா? விவாதத்தைக் கிளப்பிய விமானப்படை வீடியோ
