தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரங்களின் முக்கிய பாதுகாப்பு அம்சமான தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு இன்று உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் குறித்து எஸ்பிஐ வழங்கிய முழுமையற்ற தரவுகளுக்கு எதிரான மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “உங்கள் கைவசம் உள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
எந்த விவரங்களையும் மறைக்கவில்லை என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு எஸ்பிஐயிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.