MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என விசாரணை நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் தாவர் சந்த் கெலாட் வழக்குத் தொடர அனுமதி வழங்கியதை அடுத்து, சமூக ஆர்வலர்களான டி.ஜே.ஆபிரகாம், சிநேகமாய் கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரின் மனுவைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனது மனுவில், தன் மீது வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று சித்தராமையா நீதிமன்றத்தில் கோரினார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிவாரணம் அளித்து உத்தரவிட்டது.
இந்த நிவாரணம், ஆகஸ்ட் 29 வரை அமலில் இருக்கும்.
முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம்
