14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் தூதாண்மை தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ சீன-அமெரிக்க உறவு பற்றி குறிப்பிட்டார். அவர் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் பெரிய நாடுகளாகும். இரு நாடுகள் ஒன்றை ஒன்று மாற்ற முடியாது. ஆனால் ஒன்றுடன் ஒன்று பழகும் வழிமுறையை மாற்றலாம். அதாவது, ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் மனப்பான்மையுடன், சமாதான சக வாழ்வின் இறுதி கோட்பாட்டைப் பின்பற்றி ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறும் எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். இவை தான் இரு நாட்டு மக்களின் நன்மைகளுக்கும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் பொருத்தமானது. இரு தரப்பும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் பழகினால், ஒத்துழைப்புகளின் பட்டியலை அதிகரிக்க முடியும். பிரச்சினைகளின் பட்டியலைக் குறைக்க முடியும் என்று வாங்யீ தெரிவித்தார்.
சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுடன் ஒன்று பழகும் வழிமுறையை மாற்றலாம்: வாங்யீ
You May Also Like
முதல் 7 மாதங்களில் சீனாவில் இணைய வழி விற்பனை தொகை அதிகரிப்பு
August 22, 2025
சீனாவில் இசை நிகழ்ச்சியில் மனிதர்களுடன் நடனமாடிய ரோபோக்கள்
December 20, 2025
