மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தற்காலிக தேதி பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொது தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும்.
10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9, 2026 அன்று முடிவடையும்.
12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9, 2026 அன்று முடிவடையும்.
முன்மொழியப்பட்ட புதிய CBSE விதிகள்படி 10ஆம் வகுப்பிற்கு இரண்டாவது கட்டமாகவும் பொது தேர்வுகள் இருக்கின்றன.
இவை மே 15 முதல் ஜூன் 1, 2026 வரை நடைபெறும்.
CBSE 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் உத்தேச தேதி பட்டியல் வெளியானது
