பிரிட்டன்-சீன வர்த்தக கவுன்சில் கூட்டத்தின் நிறைவு விழாவில் லீச்சியாங் பங்கெடுப்பு

Estimated read time 1 min read

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 29ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மருடன் இணைந்து, பிரிட்டன்-சீன வர்த்தக கவுன்சில் கூட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இதில், இரு நாடுகளைச் சேர்ந்த 110க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர்.

லீச்சியாங் அப்போது கூறுகையில், சீனாவும் பிரிட்டனும் ஒன்றுக்கு ஒன்று முக்கியப் பொருளாதார வர்த்தகக் கூட்டாளிகளாகும் எனத் தெரிவித்தார். மேலும், இரு தரப்புகளும் பரந்த பொது நலன்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சர்ச்சையைத் தீர்த்து, ஒத்துழைப்புகளை விரிவாக்கினால், இரு தரப்பும் கூட்டு நலன் மற்றும் செழுமையைப் பெறலாம் என்றார். இரு நாடுகளின் தொழி முனைவோர்கள், பண்பாட்டு சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட துறையினர்கள் நட்பு பாலத்தின் மூலம், இரு நாட்டறவின் வளர்ச்சிக்கு மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

கீர் ஸ்டார்மர் கூறுகையில், நடப்புப் பயணத்தின் மூலம்  சீனாவைப் பற்றி மேலும் முழுமையாகவும் ஆழமாகவும் அறிந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டதோடு,  மேலதிகமான ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்தி, பிரிட்டன் மக்களுக்கு நன்மை அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் என்றார். மேலும், இரு நாடுகளின் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்கள் வாய்ப்புகளை இறுகப் பற்றி, மேலதிகமான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author