சீனாவில் உருகுவே அரசு தலைவர் பயணம் தொடக்கம்

உருகுவே அரசு தலைவர் யமண்டு ஓர்சி பிப்ரவரி 1ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் ஏழு நாள் அரசு முறைப் பயணத்தைத் தொடங்கினார்.

ஓர்சி சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இப்பயணத்தின் போது, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங்கும் அவரும் பேச்சுவார்த்தையை நடத்தி, இருநாட்டு பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவை ஆழப்படுத்துதல், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் உயர்தர கட்டுமானத்தை ஊக்குவிப்பது, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவற்றை குறித்து ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளனர்.

இருநாட்டு தலைவர்களின் உத்திநோக்கு வழிகாட்டுதலின் கீழ், இருநாட்டு பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவை ஆழப்படுத்துவதில் இப்பயணம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என எதிர்பார்ப்பதாகவும் நம்புவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சமீபத்தில் தெரிவித்தார்.

You May Also Like

More From Author