சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 116 பேர் பலி

சீனாவின் வடமேற்கு கிங்காய் மற்றும் கன்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டது.

You May Also Like

More From Author