புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +1-202-550-9931 என்ற எண்ணை வாட்ஸ்அப் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
எச்1பி விசாக்களின் மிகப்பெரிய பயனாளிகளான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது இந்த புதிய கொள்கை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பரவலாக கவலைகள் எழுந்துள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், புதிய கட்டணத்தின் முழுமையான விளைவுகளையும், குடும்பங்களுக்கு இது ஏற்படுத்தக்கூடிய மனிதாபிமான விளைவுகள் மற்றும் குழப்பங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
