ஏ.ஐ ஏற்றுமதி கட்டுப்பாட்டிற்கான புதிய விதிகளை அமெரிக்க பைடன் அரசு ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்டுள்ளது. இதற்கு சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பைடன் அரசு தாறுமாறாக பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுக்கிடையில் இயல்பான பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புக்குத் தீங்கு விளைவிக்கும். தவிரவும், சந்தையின் விதிகளுக்கும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்குகளுக்கும் கடுமையாகப் புறம்பானது.
இது அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உலகளவில் பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களின் நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வணிகத் துறை அமைக்கசத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 13ஆம் நாள் தெரிவித்தார்.