தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டம், தற்போது பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இதற்காக ஒரு பிரமாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 25,000 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்ட இந்த மைதானத்தைச் சமன்படுத்தும் பணிகளில் தவெக நிர்வாகிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
