தந்தையின் உடல்நிலை சரியில்லை… பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

Estimated read time 0 min read

பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்கள் சந்தி்ப்பில் பேசுகையில், என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. இதன் காரணமாக சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்.

யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு மத்திய பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

உட்கட்டமைப்பு,பெண்கள் விடுதி, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுடன் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் 18 சதவீதம் என முடிவுக்கு வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பட்ஜெட் கொடுத்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர். விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க யாரிடமும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விரைவில் இந்த சூழ்நிலை விரைவில் மாறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author