சீனா மீண்டும் மீண்டும் சுற்றிப் பார்க்கத்தக்கது ஏன்?

டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், அண்மையில் சமூக ஊடகங்களில் சீனாவைப் பாராட்டியதோடு, அனைவரும் அங்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என வலுவாகப் பரிந்துரைக்கிறேன்எனவும் குறிப்பிட்டார். இந்த உருக்கமான பதிவைப் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சீனா மீதான ஆர்வம் எழுந்துள்ளது. மேலும், ஒரே பயணத்தில் எல்லாவற்றையும் பார்க்க இயலாத விஷயம் என்று சீனாவிற்குச் சென்று வந்த பிறகு பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோடைக்காலத்தில், பண்பாட்டு சுற்றுலா, கோடைக்கால ஓய்விடச் சுற்றுலா மற்றும் சுழலியல் சுற்றுலா ஆகியவை தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. தொடர்புடைய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில், 2கோடியே 29இலட்சத்து 14ஆயிரம் வெளிநாட்டினர் சீனாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.4விழுக்காடு அதிகமாகும். அவர்களில், 77.7விழுக்காடு பேர் விசா இல்லாமல் வருகைத்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30.6 விழுக்காடு அதிகமாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பொருட்கள் வாங்கியவுடன் உடனடி வரித் திரும்பப் பெறுதல் போன்ற கொள்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஆண்டின் முதல் பாதியில் வரியைத் திரும்பப் பெறுதலுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 366விழுக்காடு அதிகரித்துள்ளது.

இது குறித்து சீனச் சுற்றுலா ஆய்வகத்தலைவர் தைபின் கூறுகையில், சீனா நீண்ட வரலாற்றையும் பரந்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. இது, பயணிகளுக்கு பலதரப்பட்ட சுற்றுலா வாய்ப்புகளை வழங்குகிறது. இவற்றை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரே பயணத்தில் முழுமையாக அனுபவிக்க இயலாத செயலாகும். மேலும், சீனாவில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நவீன வாழ்க்கை முறை அனுபவங்கள், தொடர்ந்து மேம்படுத்தப்படும் வசதிமயமாக்கக் கொள்கைகள், பாதுகாப்பான மற்றும் நிலையான சமூகச் சூழல், சீன மக்களின் நட்பார்ந்த மனப்பான்மை ஆகியவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வலுவாக ஈர்க்கின்றன என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author