“மக்களும், அதிகாரிகளும் விஜய்யை இன்னும் ஒரு நடிகராகவே பார்க்கின்றனர்”- வானதி சீனிவாசன்

Estimated read time 1 min read

முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை இன்னும் மக்களும், அதிகாரிகளும் ஒரு நடிகரைப் பார்ப்பது போன்ற மனநிலையில் தான் உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பின்போது அதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் செல்ஃபி வீடியோ எடுத்த தொடர்பான செய்தியானது முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் சமூக ஊடகத்தில் மூழ்கிக் கிடக்கும் அரசாகத் தான் செயல்பட்டு வருகிறது என்பது நிதர்சனமாகியுள்ளது. சட்டமன்றமும், முதல்வரின் அறையும் எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்பதை அறியாமல் அவரின் இந்த செயலால் சட்டமன்றம் தனது மாண்பினை இழந்து வரும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிவது யாதெனில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை இன்னும் மக்களும், அதிகாரிகளும் ஒரு நடிகரைப் பார்ப்பது போன்ற மனநிலையில் தான் உள்ளனர். இனிமேல் இதுபோன்று நடைபெறா வண்ணம் சட்டமன்றத்தின் மாண்பை காக்கும் பொருட்டு கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author