சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் பங்கெடுற்க வந்த கின்சாசா காங்கோ அரசுத் தலைவர் இட்யேன் திஷெகிடியுடன் சந்தித்துரையாடினார்.
ஷிச்சின்பிங் அவருக்கு வரவேற்பு அளித்தார். கடந்த ஆண்டின் மே திங்களில், இரு தரப்புறவு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்தப்பட்டுள்ளது. அப்போது உருவாக்கப்பட்ட ஒருமித்த கருத்துக்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளின் பல்வேறு துறைகளிலுள்ள பயனுள்ள ஒத்துழைப்புகள் அதிகமான சாதனைகளைப் பெற்று, இரு தரப்புக்கும் நன்மை தந்து, நெடுநோக்கு தன்மை வாய்ந்தவை என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இரு நாடுகள் உடன்பிறப்பு போன்ற நாடுகளாகும். இரு தரப்பு நட்புறவு உயர்மிக்கது. ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் நம்பிக்கையை அளித்து, பரஸ்பர நலன்களை நனவாக்கியுள்ளன என்று இட்யேன் திஷெகிடி தெரிவித்தார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.