சீன வணிக அமைச்சகம் டிசம்பர் 14ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரை சீனா உண்மையாக பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை 74 ஆயிரத்து 970 கோடி யுவானை எட்டியது.
இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 27.9 விழுக்காடு குறைந்தது. நவம்பர் திங்களில் சீனா உண்மையாக பயன்படுத்திய அந்நிய முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரை, சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 52 ஆயிரத்து 379 ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.9 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றின் இதே காலத்தில் மிக அதிக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.