சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது – சென்சார் போர்டு

Estimated read time 1 min read

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

“லட்சுமி – லாரன்ஸ் காதல்” திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான “யுரேகா” சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் சென்சார்போர்டு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது எனவும்,இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தொடர்ந்து, இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு,பிப்ரவரி 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

You May Also Like

More From Author