மத்திய அரசு கடந்த 1-ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் தாக்களின் போது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை எனவும் கடந்த நிதியாண்டை போலவே இந்த முறையும் 1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தது.
அதன் பிறகு தமிழகத்திற்கான சில புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டனர். அதே நேரத்தில் கல்வி மற்றும் ரயில்வே திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 17ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட் தாக்கலின் போது மகளிர் உரிமை தொகை உயர்வு குறித்த பல முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
