ரசிகரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி  

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தொடங்கி முன்னணிக்கு வந்த நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றிகரமாக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வரும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்திற்காக, ரசிகர் ஒருவரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது சூரியின் பணிவையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.
மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ திரைப்படம் மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பைப் பார்க்கக் கிராம மக்கள் ஆர்வத்துடன் கூடி வந்த நிலையில், ஒரு ரசிகர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், இரவில் படப்பிடிப்பு பார்க்க வரும் உள்ளூர் மக்களிடம் சூரியின் பவுன்சர்கள் சற்று கடுமையாக நடந்துகொள்வதாகவும், இது வருத்தத்தை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

You May Also Like

More From Author