சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 24,000 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் முக்கியப் பொறுப்பு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சிப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் எழுத்துப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தனது தந்தையின் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால், அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விலகியிருந்தது நினைவுகூரத்தக்கது.
