மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகிறார்!

Estimated read time 0 min read

தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை தருகிறார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா, இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் நாளை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்கு நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்து திருச்சி வரும் அமித் ஷா, தேர்தல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author