வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் மற்றும் உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 10ஆம் நாள், ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமமும், ரஷியாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகமும் இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார். இரு நாடுகளின் பல்வேறு துறையினர்கள், இளைஞர் பிரதிநிதிகள் உள்ளிட்ட 1000க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.
ஷென் ஹைய்சியோங் கூறுகையில், வசந்த விழா கொண்டாட்டத்துக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சிகள் 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு, சீன ஊடகக் குழுமம், “5G+4K/8K+AI” என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, 85 மொழிகளின் மூலம், உலகளவில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான பண்பாட்டு நிகழ்ச்சியை வழங்கும் என்றார்.
