சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் நாள் பதிலளிக்கையில், ஈரான் நிலைமை பற்றிய சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்றார். ஏற்படக் கூடாத இந்த போர் தொடர வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு கூடியவிரைவில் தீர்வு காண்பது, அமெரிக்கா, ஈரான் ஆகிய இருதரப்புகளுக்கு மட்டுல்லாமல், பிரதேச நாடுகளுக்கும் முழு உலகிற்கும் சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தான் சரியான வழிமுறை. ஆயுதப்பலத்துடன் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என சீனா எப்போதும் கருதுகிறது. பேச்சுவார்த்தைக்கான கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீண்டும் மூட வேண்டாம். இந்த போர் மூண்டதிலிருந்து சீனா அமைதிக்காக முயற்சி செய்து வருகிறது. மத்திய கிழக்கு பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் 4 அம்ச கருத்துக்களை சீனா தொடர்ந்து பின்பற்றி, சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமைதி பேச்சுவார்த்தைக்கு மேலும் பெரும் உதவியை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
