மே 15, 2026 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விலை உயர்த்தப்பட்டாலும், பங்குச் சந்தையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) பங்குகள் 2.65% சரிந்து ₹367.10க்கும், பாரத் பெட்ரோலியம் (BPCL) 2% சரிந்து ₹289.05க்கும் விற்பனையாகின.
சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட இந்த ₹3 உயர்வு போதுமானதாக இல்லை என்பதே முதலீட்டாளர்களின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தும் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்தது ஏன்?
