தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார்பில் நடந்த நட்சத்திர கலைவிழா – ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீலீலா பங்கேற்பு

Estimated read time 0 min read

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பாக நடைபெறும் நட்சத்திர கலை விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை ஸ்ரீலீலா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம், 3 நாட்கள் நட்சத்திர கலை விழா நடத்தப்படுகிறது.

இந்தாண்டு நட்சத்திர கலை விழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில், திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் பல சூப்பர் சிங்கர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட இசை கச்சேரி, ஜி.வி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீலீலா, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்.

You May Also Like

More From Author