Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Estimated read time 1 min read

Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் காலம் வரும் என்பது பலரின் அச்சம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏஐ அவ்வப்போது வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

அண்மையில் MJ Rathbun என்ற Al Bot Agent பிரபல Data Visualisation தளமான Matplotlib க்காக Code களை உருவாக்கி தந்துள்ளது.

ஆனால் ஏஐ உருவாக்கிய அந்த Code களை அதன் டெவலப்பரான ஸ்காட் ஷாம்பாக் சரியில்லை என கூறி நிராகரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஏஐ, டெவலப்பரைத் ‘திறமையற்றவர்’ என தனது சொந்த Blog Post இல் விமர்சித்து அதை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது.

மேலும் தனது Code களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை அந்த ஏஐ மிரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author