சீனாவில் வசந்த விழா கொண்டாட்டத்தை அனுபவிக்கும் வெளிநாட்டு பயணிகள் அதிகரிப்பு

சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை சேர்த்துள்ளனர். புதிய புள்ளிவிவரங்களின்படி, வசந்த விழாவின் போது சீனாவுக்கு வர வெளிநாட்டுப் பயணிகளின் விமான சீட்டுகளுக்கான முன்பதிவுகள் முந்தைய ஆண்டுகளின் இதேகாலத்தில் இருந்ததை விட கணிசமாக அதிகரித்துள்ளன. வசந்த விழாவைக் கொண்டாட சீனாவுக்குச் செல்வது என்பது, சீனக் கலாசாரத்தை அனுபவிக்கும் நவீன நாகரிகமாகவும் மாறியுள்ளது.

பாரம்பரிய சீனப் புத்தாண்டின் சூழ்நிலையைத் தவிர, சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நடைபெற்று வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கை வசதியையும் அவர்கள் நேரடியாக அனுபவிக்கின்றனர். இணையதளத்தில் பிரபலமாக மாறியுள்ள சீனராக மாறுவது போன்று, வசந்த விழாவைக் கொண்டாட சீனாவுக்குச் செல்வது என்பதும் சீனக் கலாசாரத்தின் ஈர்ப்பாற்றல் அதிகரித்து வருவதற்கான எடுத்துக்காட்டாகும். தற்போது சீனா பற்றி மேலதிக வெளிநாட்டு மக்கள் தன்னார்வத்துடன் ஆராய்ந்து அறிந்து கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

More From Author