நன் ஜிங் நகர் மூன்று இலட்சம் பேரின் உயிரிழப்பை ஏற்படுத்திய படுகொலை சம்பவத்துக்கு முன், அனைத்து போலித்தனமான விளக்கமும், மனித நாகரிகத்தின் இகழ்ச்சியாகக் கருதப்படும். ஜப்பான் அரசியல்வாதிகளின் பொய் கூற்றினால், வரலாற்றை மாற்றப்படாது. அதற்கு மாறாக, ஆக்கிரமிப்பு வரலாற்றை மறு ஆய்வு செய்வது, ஜப்பானின் ஒரே ஒரு தெரிவாகும்.
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம் அண்மையில் உலகளாவிய இணையப் பயன்பாட்டாளர்களுக்கு மேற்கொண்ட கருத்து கணிப்பு ஒன்றில், வரலாற்றிலுள்ள குற்றங்களைக் கணக்கிட்டு, இராணுவ வெறி சிந்தனையை முற்றிலும் ஒழித்தால் தான், ஜப்பான் இயல்பான நாடாக, சர்வதேச சமூகத்துக்குத் திரும்பலாம் என்று 82.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். வரலாற்றில், மற்ற நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்த நாடான ஜப்பான், வரலாற்றின் பிரச்சினையில் கவனமாகச் செயல்பட வேண்டுமென 89.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர். ஜப்பான் அரசு, பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மன்னிப்பு கேட்டு, அவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று 90.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
