வெளிநாடுகளில் சீன மொழி புத்தகங்கள் கண்காட்சி

வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள 100க்கும் மேற்பட்ட சீன மொழி புத்தகக் கடைகளில் தொடங்கியது.

இக்கண்காட்சியின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் படைப்புகள், அவரது சிந்தனை தொடர்பான நூல்கள் உள்ளிட்டவை முக்கியமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வசந்த விழா கலாசாரத்தின் வசீகரத்தை நெருக்கமாக உணர்ந்து கொள்ளும் விதம், வெளிநாட்டு வாசகர்களுக்கு செழுமையான பரிமாற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

You May Also Like

More From Author