அண்மையில், அமெரிக்க வணிகத் துறை பிரமுகர்கள் பலர் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். இது, இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த இணக்கமற்ற போக்கைக் குறைத்துள்ளது.
இதனிடையே, முதலாவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலியை முன்னேற்றும் பொருட்காட்சி குறித்து அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற விருந்து ஒன்றில், சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 86 பிரதிநிதிகள் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தனர்.
உலக அரசியல் இடர்பாடு, சீனாவில் வணிகத்தைப் பாதிக்கும் மிகப் பெரிய காரணமாகும் என்று எண்ணியல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த 63 விழுக்காடான நிறுவனங்கள் கருதியுள்ளன. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எண்ணியல் தொழில் நுட்ப விநியோகச் சங்கிலி மென்மேலும் சீனாவை நம்பியிருக்கும் என்று 75 விழுக்காடான நிறுவனங்கள் கருதியுள்ளன.
தவிரவும், புதிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளை உருவாக்கிக் கொள்ளல் மற்றும் முன்பதிவுகளை அதிகரிப்பது ஆகியன இப்பொருட்காட்சியின் மீதான 86 தொழில் நிறுவனங்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாகும்.