தமிழகத்திற்கு யூரியா, டிஏபி போன்ற உரங்களை தடையின்றி வழங்கிடுமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்றும், பருத்தி, கரும்பு, காய்கறிகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வகைப் பயிர்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கடிதத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய போது, ஏப்ரல், மே மாதங்களுக்கு வழங்கவேண்டிய உரத்தேவைகள், உர உற்பத்தியாளர்களால் தமிழகத்திற்கு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
எனவே 39 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, 28 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24 ஆயிரத்து 235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்களை கிடைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், உரப்பற்றாகுறை ஏற்பட்டால் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் விஜய், சாகுபடிக்கு தேவையான உரங்களை பெறுவதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
