சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கான சீனத் தரப்புப் பொறுப்பாளரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்கத் தரப்புப் பொறுப்பாளரும், நிதி அமைச்சருமான ஸ்காட் பெசென்ட், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் மார்ச் 15, 16 ஆகிய நாட்களில் பிரான்ஸின் பாரிஸ் நகரில் பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஹே லீஃபெங் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துக்களின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், கடந்த ஆண்டின் 5 சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலம், பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் சீனாவும் அமெரிக்காவும் சாதனைகளைப் பெற்றுள்ளன. இது, இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுக்கும், உலகப் பொருளாதாரத்துக்கும் மேலதிக உறுதித் தன்மை மற்றும் நிலைத்தன்மையை ஊட்டியுள்ளது என்றார்.
மேலும், அமெரிக்கா ஒருதரப்பாக கூடுதல் சுங்க வரியை வசூலிப்பதை சீனா எப்போதுமே எதிர்க்கிறது. ஒருதரப்பு சுங்க வரி உள்ளிட்ட தடை நடவடிக்கைகளை முற்றுமுழுதாக நீக்க வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதானமான சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, இரு நாடுகளுக்கும் உலகத்துக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு தரப்புகள் முரண்பாடுகளைக் குறைத்து, பிரச்சினை தீவிரமாகுவதைத் தவிர்த்து, கலந்தாவுகளின் மூலம் கருத்து வேற்றுமைகளைத் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கத் தரப்பினர்கள் தெரிவித்தனர்.
