புதிய வருமான வரி சட்டம்: டிஜிட்டல் சோதனைகள் குறித்தான பிரிவு 247 என்ன?  

Estimated read time 0 min read

மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இது வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதில் உள்ள பிரிவு 247, டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குப் கூடுதல் தெளிவான அதிகாரங்களை வழங்குகிறது.
பழைய சட்டத்தில் இல்லாத ஒரு முக்கிய அம்சமாக, இதில் டிஜிட்டல் தளம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, சோதனையின் போது வரி ஏய்ப்புத் தொடர்பாக சந்தேகம் இருந்தால், கணினி, மொபைல் போன் அல்லது மின்னணு சாதனங்களின் கடவுச்சொற்களை அல்லது அணுகல் குறியீடுகளைத் தகர்க்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.

You May Also Like

More From Author