சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார்.
முன்னதாக சிங்கப்பூரில் அந்நாட்டின் பிரதமரை சந்தித்த பின்னர், வளரும் நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு முன்மாதிரி என்று மோடி கூறினார்.
மேலும் பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான தனது பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தனக்கென “பல சிங்கப்பூர்களை” உருவாக்க விரும்புவதாக கூறினார்.
பிரதமர் மோடி தனது சிங்கப்பூர் பயணத்தின் வீடியோவை X இல் பகிர்ந்துள்ளார்.
“எனது சிங்கப்பூர் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் அரவணைப்புக்கு நன்றி.” என பதிவிட்டுள்ளார்.