0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாது – அரசியல் பார்வையாளர்கள்

Estimated read time 1 min read

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாதென, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2005-ல் கட்சி தொடங்கியது முதல் திமுக எதிர்ப்பு அரசியலை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கையிலெடுத்து பிரசாரம் மேற்கொண்டார்.

2006-ல் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களமிறங்கிய நிலையில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விஜயகாந்த் பெற்றார்.

பின்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து தோல்வியடைந்து இறங்கு முகத்தை தேமுதிக சந்தித்தது.

2024-ல் மக்களவை தேர்தல் விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வழக்கு தொடர்ந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக திமுகவை விமர்சித்து வந்த பிரேமலதா விஜயகாந்த், அந்த கட்சியுடன் கைகோர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார்.

திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கும் நிலையில் தேமுதிகவும் இணைந்ததால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாதென பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author