அடிமட்ட பணி முறைகள் பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள் எனும் புத்தகம் அண்மையில் சீன நாடளவில் வெளியிடப்பட்டுள்ளது.
அடிமட்டம் என்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரிவதற்கு அடிப்படையாகவும், வலிமை பெறுவதற்கு ஊற்றுமூலமாகவும் விளங்குகிறது. எந்த பதவியில் இருந்தாலும், ஷிச்சின்பிங் அடிமட்ட பணிகளுக்கு முக்கியத்துவத்தையும் ஆதரவுகளையும் அளித்து வருவதோடு, தத்துவ ரீதியில் அர்த்தமும் நடைமுறையில் மதிப்பும் உள்ள அடிமட்ட பணி முறைகளை அவர் ஆராய்ந்து உருவாக்கியுள்ளார். அடிமட்ட பணி முறைகள் பற்றிய அவரது கருத்துக்கள், உயரிய நோக்கம், செழிப்பான உள்ளடக்கம், ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு, நிர்வாக செயல்திறன் பற்றிய சரியான புரிதலை நிலைநாட்டி செயல்படுத்துவதற்கும், சீனாவின் நவீனமயமாக்கம் நம்பத்தக்க மற்றும் நிரந்தர ஆற்றலைப் பெறுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
9 பகுதிகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் அம்சங்கள், 1983ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான ஷிச்சின்பிங்கின் பணியறிக்கைகள், உரைகள், கட்டுரைகள், உத்தரவுகள் உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.
