சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை பெற்ற இளம் வீரரான திலக் வர்மாவும் இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி போட்டியில் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவர் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
சூரியகுமார் யாதவை சமன் செய்ய காத்திருக்கும் திலக் வர்மா :
அதன்பின்னர் தற்போது ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறார். இதன் காரணமாக அவரது ஆட்டம் இந்த ஆஸ்திரேலிய தொடரில் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் விளையாட இருக்கும் திலக் வர்மா சர்வதேச டி20 போட்டிகளில் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை கடந்து தற்போதைய கேப்டனான சூரியகுமார் யாதவின் சாதனை ஒன்றினை சமன் செய்யும் ஒரு அற்புதமான வாய்ப்பில் காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 30 இன்னிங்ஸ்களில் விளையாடி 54 ரன்கள் சராசரி உடனும், 149 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் உடனும் இரண்டு சதம் மற்றும் நான்கு அரை சதம் உட்பட 962 ரன்களை டி20 போட்டிகளில் விளாசி உள்ளார். மேலும் அவர் 38 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 1000 ரன்களை வேகமாக கடந்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி சார்பாக அதிவேகமாக 1000 ரன்களை டி20 போட்டிகளில் அடித்த வீரராக விராத் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி தனது 27-வது இன்னிங்ஸ்ல் இந்திய அணிக்காக 1000 ரன்களை அடித்திருந்தார். அவருக்கு அடுத்து கே.எல் ராகுல் 29 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளார். மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் 31 இன்னிங்ஸ்கலில் 1000 ரன்களை கடந்துள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா இந்த தொடருக்கு பின்னர் தான் ஓய்வை அறிவிப்பார் – சிறுவயது பயிற்சியாளர் பேட்டி
நான்காவது இடத்தில் ரோகித் சர்மா தனது 40-ஆவது இன்னிங்ஸ்ஸில் 1000 ரன்களை கடந்திருந்தார். இந்நிலையில் தற்போது 30 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ள திலக் வரர்மா அடுத்த போட்டியில் 38 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி சூரியகுமார் யாதவுடன் 31 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்த வீரராக மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித்தை முந்தி சூர்யகுமாரின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் – திலக் வர்மா appeared first on Cric Tamil.
